Friday 4 June, 2010

உன் குறும்புகளத்தனையும் தேன்..! - வசன கவிதை!


வேண்டாம் இப்பிள்ளையென
உன்னை நினைத்தேன்..!
நனி மகவே
உன் பிறப்பால்...
உன் சிறப்பால்...
உனையா நான்
வேண்டாமென நினைத்தேன்
என்று இன்றளவும்
வெட்கப்படுகின்றேன்..!

உனையா வேண்டாமென நினைத்தேன்
என் திருமகவே
உன் குறும்புகளத்தனையும் தேன்..!
உன் குறும்புகளைப் பார்த்து
உன்னோடு சேர்ந்தபடி
துள்ளிக் குதித்தேன்..!

அப்பா என நீயழைக்கையில்
அகிலத்தை நான் மறக்க
வேண்டுமென்பதற்க்காகத்தானோ
அகிலனனென பெயர் கொண்டாய்..!
முகிலென நீயிருக்க...
இல்லத்தில்
மழையென மகிழ்ச்சி
இங்கே பொழியுதடா..!

உன் மழலைப் பேச்சழகும்
மறக்கவியலா குறும்புகளும்
மான் போன்ற நடையழகும்
யாவரையும் கவருமடா..!
உன் போன்றதொரு
பிள்ளை வேண்டுமென
பிறர் மனதில் தோன்றுமடா..!

அகிலமாளப் பிறந்தாயோ
நானறியேன் அகிலா..!
அன்பால் நீ அனைவரையும்
ஆளுகின்றாய்..!
அதை நான் உணருகின்றேன்
மகிழ்வாய்..!

உன்றன் தாய்
பெண் பிள்ளை நீயென
நினைத்து ஆண்பிள்ளையாக
உனைப் பெற்றாள்..!
உவகை  கொண்டாள்..!

இத்தோடு நீ பிறந்து
ஆண்டிரண்டு ஆனதடா அகிலா..!
என மனமெங்கும்
மகிழ்ச்சி வெள்ளம் பரவுதடா அகிலா..!
நீ என்றென்றும் வாழவேண்டும்
பிறந்த தாய்நாடு
பெருமைப் படும்படி
நீ  வாழவேண்டுமகிலா..!

வாழ்க நீ பல்லாண்டு...
பல்லாண்டு...
பல்லாயிரத்தாண்டு..!



8 comments:

VELU.G said...

//வாழ்க நீ பல்லாண்டு...
பல்லாண்டு...
பல்லாயிரத்தாண்டு..!
//

கவிதை அருமை

என்னுடைய வாழ்த்துக்களும்

மோகனன் said...

மிக்க நன்றி தோழரே...

அடிக்கடி படிக்க வாங்க..!

மோகனன் said...

பிரபாகரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..!

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

Abarna said...

very nice:)

Abarna said...

very nice

Anonymous said...

இதுவும் நன்று.
அகிலனுக்கு என் செல்ல வாழ்த்துக்கள்.

மோகனன் said...

நன்றி அபர்ணா... நன்றி ஸ்வர ராணி...